பார்வையற்றோருக்கான சதுரங்க போட்டி : ஈரோடு முதலிடம்

கரூரில்,ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்க நடத்திய மாநில அளவிலான பார்வையற்றோருக்கான சிறப்பு சதுரங்க போட்டியில் ஈரோடு மாவட்டம் முதல் பரிசை தட்டிச் சென்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மார்னிங் ஸ்டார் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில், ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான பார்வையற்றோருக்கான சிறப்பு சதுரங்க போட்டி நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுப்பிரமணி, கரூர் ஹோஸ்ட் லயன் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் சேது குமார், லயன் சங்க தலைவர் செல்வராஜ், ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

போட்டிகளை யுகம் அறக்கட்டளை ஆனந்த் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த போட்டியில், கரூர், திருச்சி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், சேலம், கோவை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். போட்டியின் இறுதியில் ஈரோட்டில் சேர்ந்த நந்தகுமார் முதல் பரிசையும் பிரவீன் குமார் இரண்டாவது பரிசையும், கொடைக்கானலை சேர்ந்த சூர்யா பிரகாஷ் மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பணம் கோப்பை சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story