முதல்வர் வருகை: அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சியில் ஆய்வு
ஆய்வு செய்த அமைச்சர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 13.ம் தேதி பொள்ளாச்சியில் தமிழக அரசின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்,.
இதை அடுத்து கோவை சாலை ஆட்சிபட்டி பகுதியில் முதல்வர் பங்கேற்க உள்ள இடத்தை தமிழக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் காந்தி குமார் பாடி அவர்கள் விழா நடக்கும் மேடை அமைக்கும் பணி குறித்து அதிகர்களிடம் கலந்து ஆலோசித்து இடத்தை பார்வையிட்டார்
. நலத்திட்ட உதவிகள் பயன் பெறும் 20 ஆயிரம் பயனாளிகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிய உள்ளனர்.. கடந்த இரண்டு கூட்டங்களில் இடம்பெற்ற குறைபாட்டாள் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ஆகவே இந்த முறை சிறப்பான முறையில் பந்தல் அமைக்கும் பணி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஏதுவாக இட வசதி ஏற்பாடு செய்ய இந்த இடம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.