குழந்தை தொழிலாளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி

குழந்தை தொழிலாளர்  தின விழிப்புணர்வு உறுதிமொழி

 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தலைமையாசிரியர் தாமரைசெல்வன் தலைமையில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லாத நாட்டை உருவாக்கவும், பிஞ்சு குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவம், முறையான கல்வியை அளித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே அனைவரின் கடமை என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழியேற்றனர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story