குழந்தைகள் தின உறுதி மொழி ஏற்பு
குழந்தைகள் தின உறுதி மொழி- வாசித்து ஏற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உறுதிமொழியை வாசித்தார்.
அப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை பள்ளியில் கல்வி கற்பதை உறுதி செய்வோம். குழந்தைகளுக்கான வாழும் உரிமை, வளரும் உரிமை, பாதுகாப்பு உரிமை, மற்றும் பங்கேற்பு உரிமை ஆகியவற்றை உறுதி செய்வோம். நமது அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தை தொழிலாளராகவோ, குழந்தை திருமணமும், பெண் சிசு மற்றும் கரு கொலையோ, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமையோ, குழந்தை கடத்தலும் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் குழந்தைகளை பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்.
எங்கேயும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கிழைத்தாளோ, அல்லது வன்முறையோ நடைபெற்றால், நடைபெறுவது போல் தெரிந்தால், உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிப்போம் என உறுதிமொழி வாசித்து உறுதி மொழியை ஏற்றார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இந்த உறுதி மொழியை திருப்பி வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.