கிறிஸ்மஸ்; 18 அடி உயரத்தில் சந்திரயான் 3 மாதிரி கேக்
சந்திராயன் கேக்
மயிலாடுதுறையில் பிரபல தனியார் உணவகத்தில் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் புதுமையான இனிப்பு ரகம் கொண்ட கேக்குகளை செய்து பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்தரயான்3 விண்கலம் போன்று மாதிரி கேக் வடிவமைத்து பேக்கரி கடை வாசலில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கேக் சுமார் 18 அடி உயரத்தில் பலவகை மூலப் பொருட்கள் கொண்டு இனிப்பக மாதிரி கேக் தயார் செய்யப்பட்டுள்ளது.
பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கேக்கை மயிலாடுதுறையில் உள்ள மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்து செல்போனில் செல்ஃபி எடுத்து சென்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பற்றி கடை உரிமையாளர் கூறுகையில் சந்திரயான் 3 விண்கலம் உலக அளவில் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து வகையில் அதை மாதிரி கேக்காக வடிவமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற கேக்கை தயார் செய்துள்ளோம். மேலும் அடுத்த வருடம் கிறிஸ்மஸ் தினத்திற்கு இன்னும் புதுமையான முறையில் கேக் தயார் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று கூறினார்.