கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை திட்டம்
கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை திட்டம்
மயிலாடுதுறை நகரில், கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை,இந்த திட்டத்தின் கீழ் தூய்மை பணி துவக்கம்.
மயிலாடுதுறை நகர் முழுவதும் கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை நகரில் 86 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த பணிகள் தொடங்கின. 15 ஜேசிபி இயந்திரங்கள், 40 டிராக்டர்களுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் 400 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நகரின் 36 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. நகராட்சிக்குட்பட்ட வார்டு-11 கிட்டப்பா பாலம் காவேரி ஆற்றங்கரையில் "என் குப்பை எனது பொறுப்பு" மாபெரும் தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வல அமைப்புகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story