கரூரை மிரட்டும் கார் மேகங்கள்

கரூரை மிரட்டும் கார் மேகங்களால் பொதுமக்கள் அச்சத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

கரூரை மிரட்டும் கார் மேகங்கள். அச்சத்திலும் மகிழ்ச்சியிலும் பொதுமக்கள். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகி வந்தனர். மேலும் வரும் 30ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என அச்சத்தில் இருந்தனர் பொதுமக்கள். இந்த நேரத்தில் தான் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் நாள் வரும் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் தூரல் மழையுடன் நின்று விட்டது.

அதேசமயம் இன்று கோடையின் தாக்கம் அதிகரித்து வெப்பத்தை சூரியன் உமிழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இன்று சற்று முன் கரூர் நகரப் பகுதிகளில் வலம் வரும் கார் மேகங்களை பார்த்து,இன்றும் கனமழை பெய்தால் என்ன செய்வது? என்ற அச்சத்தில் உள்ளனர். அதே சமயம் மழை விரும்பிகளும் இயற்கை ஆர்வலர்களும் கரூரை சுற்றி மிரட்டி வரும் கார் மேகங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story