முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய திமுகவினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்- அன்புக்கரங்களில் அன்னதானம். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் பள்ளி குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் இன்று காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி மண்டல செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிற்றுண்டி வழங்கிய பிறகு, இறை வணக்கம் பாடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து உடல் நலத்தோடு ஆட்சி நடத்திட வேண்டுமென வேண்டி சிற்றுண்டியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story