ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கணும்...!
ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த பிஜேபியினர். சமையலுக்கு பயன்படுத்துவதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பது தெரிந்தும், தொடர்ந்து பாமாயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதனால், தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் தரமாக இருப்பதால், சமையலுக்கு அதை பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள். அரசு இதற்கு செவிமடுக்காதல், இன்று கரூர் மாவட்ட பிஜேபி விவசாய அணி சார்பில் பொது மக்களுக்கு ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, விவசாய அணியின் மாவட்ட தலைவர் அக்னிஸ்வரா செல்வம் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.