கடும் வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்
பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக தென்னை சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சியின் சிறப்பே தென்னை இளநீர் தான் தென்னை சாகுபடியில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி தென்னை மரங்களில் சுமார் மூன்று கோடி தென்னை மரங்கள் பொள்ளாச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு என உலகம் முழுவதும் பொள்ளாச்சி இளநீர் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் இளநீருக்கு அதிக வரவேற்பை மக்கள் அளித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக பொள்ளாச்சி இளநீர் என்றாலே அதற்கு தனி மவுசு உள்ளது..
ஆனால், அண்மை காலமாகவே கேரளா வேறு பாடல் நோய் பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் பெறும் அவதி அடைந்து வந்தனர். மேலும் தேங்காய் விலை வீழ்ச்சி ஒரு புறம் காணப்பட்டது இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சரியான மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய விலை நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமலும் நிலத்தடி நீரும் 2000 அடிக்கு கீழ் சென்றதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆனைமலை வடக்கு பாளையம் பகுதி பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை போர்வை போர்த்தியது போல் காணப்பட்ட தென்னை மரங்கள் தற்போது கடுமையான வறட்சியில் தண்ணீர் இல்லாமல் கருகி அனைத்தும் வெறும் எலும்பு கூடாக மாறி உள்ளது. ஒரு தென்னை மரத்தில் ஒரு பச்சை இலை கூட இல்லாமல் முழுவதுமாக காய்ந்து வெறும் மரம் மட்டும் உள்ள நிலைமையைக் கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் உள்ள தென்னை விவசாயிகளை காப்பாற்ற அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.