கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - 3 பேர் கைது..!

கோவை ஆழியார் பகுதியில் வீட்டை பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரி என்பவர் கடந்த (28.08.2023) அன்று அவரது வீட்டை பூட்டி வெளியே சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கபட்டு வீட்டின் உள்ளே 15 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023ம் தேதி பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய கோடூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ்,கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் மற்றும் கவின் குமார் ஆகிய மூவரையும் விசாரணை மேற்கொண்டதில் அமிர்த கவுரி வீட்டின் கதவை உடைத்து நகைகளை மூவரும் திருடியது தெரியவந்தது.இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story