கோவை தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட போவதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
கோவை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதியில் தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை பாஜக நிர்வாகிகள் சந்தித்து பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்பரை செய்ய அழைப்பு விடுத்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்த ராஜனை வெற்றி பெறச் செய்ய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராமு கண்ணப்பன் பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளர் வாணி ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story