ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். 

மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில் நிலைய நடைமேடை, மற்றும் வெளிப்புறத்தில் சுமார் 15 அடி ஆழத்துக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ரயிலிலிருந்து முதல் நடைமேடையில் இறங்கிய பெண்மணி சத்யாதேவி (38) என்பவர் தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்கான கட்டுமானப் பணி காரணமாக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதையை பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் அவர் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் யுரேகா, வட்டாட்சியர் சபீதாதேவி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story