மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி திடீர் கோளாறு அமைச்சர் அறிவுரை

X
தொலைபேசியை சரிசெய்த அதிகாரிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி திடீர் கோளாறு அமைச்சர் அறிவுரை
நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பருவ மழை முன்னேற்பாடு கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முன்னிலை வகித்தார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக அழைப்பு எண் 04364290797ஐ , தொடர்பு கொண்டார். ஆனால் அது வேலை செய்யவில்லை. உடனே ஊழியர்கள் ஓடிச் சென்று, கணினியுடன் இணைக்கப்பட்ட அந்த தொலைபேசியை, 15நிமிடத்தில் சரி செய்து வைத்தனர் . இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story
