பொள்ளாச்சி : வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

பொள்ளாச்சி : வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்


வனப்பகுதியில் மூன்று கி.மீ பயணம் செய்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு ஒன்றிற்கு ரூபாய் 4.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் பயனாளிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மலைப்பாங்கான கோழிக்கமுத்தி, கூமாட்டி,நாகர்ஊற்று மற்றும் எருமை பாறை ஆகிய பகுதிகளில் மொத்தம் 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் அதிகாரிகளுடன் வனப்பகுதிக்குள் மூன்று கிலோமீட்டர் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பொள்ளாச்சி,ஆனைமலை மற்றும் வால்பாறை பகுதிகளில் அமைந்துள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்தும் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு செய்தார். இக் கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர்,மாவட்ட வன அலுவலர்,வட்டாட்சியர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்,பொள்ளாச்சி மற்றும் வால்பாறை நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேட்டைக்காரன் புதூர் மற்றும் ஒடைய குளம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story