கரூரில் வானில் வர்ணஜாலம் காட்டிய வான வேடிக்கை

கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வானில் வான வேடிக்கை நடத்தப்பட்டது.
கரூரில் வானில் வர்ணஜாலம் காட்டிய வான வேடிக்கை. பொதுமக்கள் மகிழ்ச்சி. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவில் முக்கிய நாளான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கம்பம் விடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கீழிருந்து வானத்திற்கு பறந்து சென்ற மத்தாப்புகள், பல வண்ணங்களில் வெடித்து பூக்களைப் போல் சிதறிய காட்சி காண்போரின் மனதை கொள்ளை கொண்டது.

Tags

Next Story