டான்ஸ் வகுப்பு நடத்துவதாக கூறி இளம் பெண்களை சீரழித்த நபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் !

புகார்

புகார்
டான்ஸ் வகுப்பு நடத்துவதாக கூறி இளம் பெண்களை சீரழித்த நபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்க பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
டான்ஸ் வகுப்பு நடத்துவதாக கூறி இளம் பெண்களை சீரழித்த நபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்க பெண்கள் வந்ததால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், முசிறி, சேர்குடி மேல தெருவை சேர்ந்தவர் நீலேஷ் மனைவி ஜெயஸ்ரீ வயது 21. இருவரும் மேடை நடன கலைஞர்கள். இவர்கள் கரூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த மதி என்ற மதியழகன் நடத்தி வரும் சன் ஸ்டார் என்ற நடன குழுவில் பணியாற்றி வந்தனர். இதுபோல நிறைய இளம் பெண்களை அழைத்து வந்து நடன பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை மதியழகன் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜெயஸ்ரீயையும் விபச்சாரத்திற்கு உடன்பட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஜெயஸ்ரீ உடன்பட மறுத்ததால், மூன்று நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து மதியழகனும் அவரது கூட்டாளிகள் பிரவீன் மற்றும் பிரீத்தி ஆகியோர் இரும்பு கம்பி,பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அங்கிருந்து தப்பிய ஜெயஸ்ரீ தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயஸ்ரீ இது தொடர்பாக அளித்த புகாரில் மதியழகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர். இளம்பெண் ஜெயஸ்ரீயை துன்புறுத்திய சம்பவம் அறிந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய நடன கலைஞர்கள் ஒன்று கூடி,தமிழக மேடை நடன கலைஞர்கள் நல சங்க மாநில தலைவர் அஜித் ராஜா தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தமிழக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் அரசப்பன் புகார் மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான மதுரை சல்மா செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, என்னையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடமிருந்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு, என்னையும் சீரழித்து விட்டார் மதியழகன். காவல்துறை இப்போது மதியழகன் மீது வழக்கு பதிவு மட்டும் செய்துள்ளது. ஆனால், மதியழகனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இன்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
Next Story


