முடி திருத்தும் சமூக குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்

முடி திருத்தும் சமூக குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

தீக்குளிக்க முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபெண் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு.
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வடக்குத்தெருவை சேர்ந்த முருகன் முடிதிருத்தம் தொழில் செய்பவர். இவரும் இவரது மனைவி கனிமொழி ஆகிய இருவரும் இடப்பிரச்சனை தொடர்பாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக குற்றம்சாட்டி கடந்த 12ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனுஅளிக்க வந்தபோது ஆட்சியர் அலுவலகம் முன்பு கனிமொழி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தபோது போலீசார் தடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். உடல்நலம் பெற்று வீடு திரும்பிய கனிமொழி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தன்பிரச்சனை தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனு அளித்தார். அதில் முடி திருத்தும் சமுதாயத்தை சேர்ந்த தங்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும கலியபெருமாள் என்பவருக்கும் வேலி பிரச்சனை இருந்து வந்தது.. இந்த பிரச்சனை தொடர்பாக எங்கள் கிராமம் முக்கியஸ்தர்களிடமும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து பிரச்சனைக்குறிய இடத்தில் அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் எங்களுக்கு உண்டான இடத்தில் வேலி வைத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் இடத்தை எதிர் தரப்பினரிடமே கொடுத்து விடுமாறு காமராஜ் மற்றும் ராமச்சந்திரன் , சாவித்திரி ரவீந்திரன், மாலதி ராஜி, கலியபெருமாள் கனகசபை, தமயந்தி, சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தும் இடத்தை கொடுக்காததால் எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் எங்களிடம் பேசக்கூடாது என்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். யாரும் எங்களிடம் எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் எங்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்மதன் கோயிலில் சாமி கும்பிடக்கூடாது, டீகடையில் டீகொடக்ககூடாது என்றெல்லாம் கூறி எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அப்பகுதியில் முடி திருத்தும் சமூகத்தை சார்ந்தவராக தாங்கள் ஒருவர் மட்டும் இருப்பதால் காமராஜர் தூண்டுதலின் பேரில் பல பிரச்சினைகளை செய்து வரும் எதிர் தரப்பினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்’டுள்ளார்.

Tags

Next Story