திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கடந்த 6ம் தேதி தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக்கட்டிடம் ரூ.4.40கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
அந்த நேரத்தில் அங்கே வந்த மயிலாடுதுறை திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான குண்டாமணி செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி அடிக்கல் நாட்டலாம் என்று அங்கிருந்த அதிகாரிகளையும் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரையும் பார்த்து கேள்வி எழுப்பினார், காரில் அமர்ந்திருந்த எம்எல்ஏ ராஜ்குமார் சமாதானப்படுத்த முயன்ற போது கோபமடைந்த நகர் மன்ற தலைவர், நீ எப்படி எம்எல்ஏ ஆன நீ காங்கிரஸ் ஓட்டிலயா ஜெயிச்ச, திமுக ஓட்டு வாங்கி தான் ஜெயிச்ச எனக்கூறி கடும் வார்த்தைகளால் திட்டி அனுப்பினார். இந்த செய்தி சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியானது.
இதுகுறித்து இன்று மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மூங்கில் ராமலிங்கம் நகரத் தலைவர் ராமானுஜம் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை தரக்குறைவாக திட்டியும் ஒருமையில் பேசியும் நகர செயலாளர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரை விழாவுக்கு அழைத்ததன் பேரில் அவர் சென்றதை கொச்சைப்படுத்தியசெயலை கண்டிக்கிறோம் என்றும் உடனடியாக திமுக தலைமையும் நகர செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளிடம் தெரிவித்துள்ளனர். இந்த செயல் மயிலாடுதுறையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.