மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய வருமான வரித்துறை காங்., கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை கண்டித்து பொள்ளாச்சியில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

பொள்ளாச்சி..மார்ச்..30 மத்திய அரசின் வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காக பணம் எடுக்க முடியாமல் முடக்க நினைத்து அக்கட்சியின் நிதி 135 கோடி அனுமதி இன்றி எடுத்தும் 1823 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் தேர்தலில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் வருமானவரித்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.. மத்திய மோடி அரசுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால் காங்கிரஸ் கட்சிதேர்தல் செலவினங்களுக்காக பணம் எடுக்க முடியாமல் முடக்கி உள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசு இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்..

Tags

Next Story