கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கோரிக்கை

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கோரிக்கை

 நினைவு தினம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தமிழக அரசுக்கு நான்கு கோரிக்கைகள் ‌விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்ப படையாட்சி தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்று உயிர் தியாகம் செய்த முதல் நபர் ஆவார். அவரின் 115 ஆம் ஆண்டுநினைவு தினம் மயிலாடுதுறையில் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் மற்றும் சில அமைப்பினர் சுவாமி நாகப்ப படையாட்சியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தனர் அதன் பிறகு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில். பொன்.குமார் சிறப்புறையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியது:- இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிர போராட்டத்திற்கு ஊக்கமளித்தவர் மயிலாடுதுறை தியாகி நாகப்பபடையாச்சியாவார். காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டத்தை சோதனை முறையில் வடிவமைத்த இடம் முதல் களப்பலியான நாகப்பபடையாச்சியார் போன்ற இளைஞர்கள் இல்லை என்றால் சத்தியாகிர போராட்டம் வெற்றிபெற்றிருக்காது என்று காந்தியடிகள் கூறியுள்ளார். நாகப்ப படையாச்சியாரின் தியாகம்தான் காந்தியடிகள் இந்தியாவில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி விடுதலை பெறவைத்தது. இதில் முதல் களப்பலியானவர் 1909ம் ஆண்டு நாகப்பபடையாச்சி இறந்தார்.ஒராண்டு கழித்து நாராயணசாமி இளைஞர் இறந்தார். அதன்பிறகு 5 ஆண்டு கழித்துதான் தில்லையாடி வள்ளியம்மை இறந்தார். தில்லையாடி வள்ளியம்மை பெயரில் பல்வேறு நினைவு சின்னங்களை அரசு கொடுத்துள்ளது. ஆனால் முதலில் பலியான நாகப்பபடையாச்சியார் தியாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அவரது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தியாகி நாகப்பபடையாச்சி வரலாற்றை பள்ளி பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும்,. மயிலாடுதுறையில் முழுவுருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நியைத்திற்கு நாகப்பபடையாச்சி பெயர் சூட்ட வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை நிறைவேற்ற வலியுறுத்துவேன் சுதந்திரபோராட்ட தியாகிகளை எல்லோரும் போற்ற வேண்டும். அரசு முன்முயற்சி எடுக்காத காரணத்தால் நாங்கள் எடுத்திருக்கிறோம் எந்தவித அரசியல் உள்நோக்கம் இல்லை. இனி ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சி நடக்கும் என்றார். நாகப்பபடையாச்சி தேச தலைவர் அவரை யாரும் போற்றாததால் நாங்கள் செய்கிறோம். இதில் மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே மணி, உள்ளிட்ட பல்வேறு சத்ரியர் பேரவையை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story