கரூரில் பூச்சொரிதல் விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கரூரில்,பூச்சொரிதல் விழா தொடர்பாக விழா கமிட்டினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூரில்,பூச்சொரிதல் விழா தொடர்பாக விழா கமிட்டினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். நேற்று கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

பூச்செரிதல் விழாவில் முதல் கட்டமாக 49 அலங்கார வண்டிகள் பங்கேற்பதாக இருந்தது. இன்று பூத்தட்டு விழா கமிட்டியின் தலைவர் டி.சி. மதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2- அலங்கார வண்டிகள் சொந்த காரணங்களுக்காக பங்கேற்க இயலாது என தெரிவித்ததால், இறுதியாக 47 அலங்கார ரதங்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. கரூர் மாநகராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மின்ஒளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பல்வேறு மலர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 50,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள,கரூர், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு அனைத்து பூத்தட்டு விழா கமிட்டினரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும்,,அலங்கார ரதங்கள் கோவிலை நோக்கி ஊர்வலமாக வரும்போது அநாகரிகமாக யாரும் நடந்து கொள்ளக் கூடாது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் செய்யக்கூடாது போன்ற ஆலோசனைகளை காவல்துறையினர் வழங்கினர்.

Tags

Next Story