நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை
ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை. கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அதிமுகவை தலைவர் திரு.வி. க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டத்தில், கரூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய கழக பூத் தலைவர்கள், செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார் எம் ஆர் விஜயபாஸ்கர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து எம் ஆர் விஜயபாஸ்கர் கட்சியினர் இடையே சிறப்புரை நிகழ்த்தினார்.