தொடர் மின் வெட்டு - பொது மக்கள் சாலை மறியல்.

தொடர் மின் வெட்டு - பொது மக்கள் சாலை மறியல்.

சாலை மறியல் 

பொன்னேரியில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் செங்குன்றம்-பழவேற்காடு சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னக்காவனம், திருஆயர்பாடி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோகம் இல்லை எனவும், வேண்பாக்கம் பகுதியில் உள்ள மின் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டாலும் நடவடிக்கை இல்லை எனவும் புகார் தெரிவித்திருந்த நிலையில், மாலை 4 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டு, தொடர்ந்து மின் விநியோகம் தடைப்பட்டதால், இரவு 8 மணி முதல் பொன்னேரி நகராட்சியின் சின்னக்காவனம், திருஆயர்பாடி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நகராட்சி அலுவலகம் அருகே செங்குன்றம்-பழவேற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனவும், தொலைபேசியை எடுப்பதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். தனியாக டிரான்ஸ்பார்மரை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாலையில் தற்காலிகமாக மின் விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story