கரூரில் குளிர்ந்த மேகமூட்டத்துடன் மிதமான மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூரில் குளிர்ந்த மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் அதிகரித்ததால், பொதுமக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகி வந்தனர். தற்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாடு காரணமாக, வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாகவும்,நேற்று ஒரே இடத்தில் மட்டும் மழை பெய்தது.

இன்று காலை முதல் மீண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கிய நிலையில், சற்று முன் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சாரல் மழையாக துவங்கி தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோடையின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பருவநிலை மாறுபாட்டால், மேகம் குளிர்ந்து, பூமியில் மழை பெய்ய துவங்கியதால் சுற்றுவட்டார பகுதி குளிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story