பருத்திக் குவிண்டால் ரூ.7,432 விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

பருத்திக் குவிண்டால் ரூ.7,432 விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

பருத்தி ஏலம் 

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று தொடங்கியது. இந்த மறைமுக ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,432-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,669-க்கும் சராசரியாக ரூ.7,020-க்கும் விலைபோனது. ஒரேநாளில் மொத்தமாக 1,400 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 350 விவசாயிகள் கொண்டுவந்த பருத்தியை தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருப்பூர், தேனி, கரூர், விழுப்புரம், பன்ருட்டி உள்ளிட்ட ஊர்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில்; இருந்து வந்த வியாபாரிகள், மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். குறைந்தபட்ச ஆதாரவிலையை விட கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story