அத்துமீறி கஞ்சா விற்ற தம்பதி கைது

அத்துமீறி கஞ்சா விற்ற தம்பதி கைது

பொள்ளாச்சி அருகே அத்துமீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 

பொள்ளாச்சி அருகே அத்துமீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனின் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆனைமலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து அம்பராம்பாளையம் அருகே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நாகப்பட்டினம் சுனாமி குவாட்டர்சை சேர்ந்த 42 வயதான அன்னக்கொடி மற்றும் அவரது மனைவியான 34 வயதான லட்சுமி என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான ஆனந்த் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான வாகன ஓட்டுநர் மாணிக்கவாசகம் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 4.100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story