மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரில் அழுகி சேதமான பயிர்கள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய தாலுக்காக்களின் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீர் வடியாமல் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடிபயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைநீர் வடியாமல் வயலிலேயே சாய்ந்து செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரிதி கூறுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மேல் வாய்க்கால், கீழ்வாய்க்கல் இரண்டையும் தூர்வாராதல் சம்பா பயிர்கள் தொடர்ந்து தண்ணீரில் மிதப்பதாக வேதனை தெரிவித்தார். திருக்கடையூரைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் தனது வயலில் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரன சம்பா பயிர் மற்றும் மழைநீரில் முளைத்த நிலக்கடலையையும் மாவட்ட ஆட்சியர் முன்பு காண்பித்து நஷ்ட ஈடு கேட்டு கவலையுடன் கோரிக்கை வைத்தார்.
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ஆட்சியர் மகாபாரதி விவசாயிகளிடம் தெரிவித்தார்.