அரசு பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு தினசரி ஊட்டச்சத்து உணவு

அரசு பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு தினசரி ஊட்டச்சத்து உணவு

உணவு வழங்கல் 

மயிலாடுதுறை அடுத்துள்ள கீழாத்துக்குடி அரசு பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு தினசரி ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை அண்மையில் தொடங்கினார். இதனால் தமிழகம் முழுவதும் உற்சாகம் அடைந்துள்ள அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை ஒன்றியம் கீழஆத்துக்குடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 100 பேருக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றிக்கு கழகத்தினர் தொடங்கினர். இதில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் குட்டிகோபி கலந்து கொண்டு மாணவ மாணவிகள் 100 பேருக்கு இனிப்பு, சுண்டல், முட்டை மற்றும் பால் ஆகிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story