தருமை ஆதினம் மிரட்டல் வழக்கு – புதிய திருப்பம்

தருமை ஆதினம் மிரட்டல் வழக்கு – புதிய திருப்பம்

கைது செய்யபட்டவர்

தருமை ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் காவல்துறை ஆவணங்கள் பொய் என நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது சன்னிதானத்தின் ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 9 நபர்கள் எதிரிகளாக சேர்க்கப்பட்டு அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . இதில் நான்கு நபர்களை ஏற்கனவே போலீசார் இரு நாள் போலீஸ்காவில் எடுத்து விசாரித்து பலரிடமிருந்து ஹார்ட் டிஸ்க்களையும் வீடியோக்களையும் கைப்பற்றியதாகவும் அதில் தஞ்சை பாஜக வடக்கு மாவட்ட பொது செயலாளர் வினோத் என்பவர் அரசு சாட்சியாக மாறி ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகார் அனைத்தும் உண்மை என்றும் நான் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டார்.

குற்றவாளிகள் பட்டியலில் ஏழாவது நபராக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் இதற்கிடையே கடந்த 15 ஆம் தேதி மும்பையில் பிடிபட்ட மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை கொண்டுவரப்பட்டு 16ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் அவரை மயிலாடுதுறை போலீஸ்காரர் போலீஸ்காவளி எடுத்து விசாரிக்க திருச்சம்பள்ளி நீதித்துறை நடுவர் நீதிபதி கண்மணியிடம் அனுமதி கேட்டனர். ஒருநாள் மட்டும் அனுமதி அளித்திருந்தார். போலீஸ்காவலில் எடுத்து அகோரத்தை. விசாரித்ததில், அகோரத்தின் செல்போனை திருவெண்காட்டில் உள்ள அவர் வீட்டில் இருந்து கைப்பற்றியதாகவும் அவர் கம்ப்யூட்டர் சாதனத்தில் இருந்து அதனுடைய ஹார்ட் டிஸ்கை கைப்பற்றியாகவும் நீதிமன்றத்தில் நேற்று மயிலாடுதுறை போலீசார் ஆவணத்தை ஒப்படைத்தனர்.

அப்பொழுது அகோரம் என் செல்போனை மயிலாடுதுறை போலீசார் மும்பையில் பிடுங்கியதாகவும் தற்போது திருவெண்காட்டில் அதை கைப்பற்றியதாக எழுதி வாங்கி இருப்பது பொய் என்றும் ஆட்சேபனை தெரிவித்தார். அதை மனுவாக எழுதி வாங்கி வழக்கு ஆவணங்களுடன்நீதிபதி இணைத்தார். அடுத்த மாதம் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார் அதன் பிறகு அகோரத்தை மயிலாடுதுறை போலீசார் மயிலாடுதுறை கொண்டு வந்து கிளைச் சிறையில் அடைத்தனர். 28 ஆம் தேதி அகோரத்தின் ஜாமீன் மனு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags

Next Story