காட்டுக்குள் இறந்த நிலையில் யானை - உடற்கூறாய்வு முடிவுகள் வெளியீடு
காட்டுக்குள் இறந்த நிலையில் யானை - உடற்கூறாய்வு முடிவுகள் வெளியீடு
காட்டுக்குள் இறந்த நிலையில் யானை - உடற்கூறாய்வு முடிவுகள் வெளியீடு
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடப்பன் புளியமரம் சராக பகுதியில் வன ஊழியர்கள் அன்றாட ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காட்டு யானை ஒன்று கீழே படுத்தபடி கிடப்பதை வன ஊழியர்கள் கண்டு அருகே சென்று பார்த்தபோது யானை இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வன ஊழியர்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் யானையின் உடலுக்கு உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.இதன் அடிப்படையில் இறந்தது பெண் எனவும், இறந்த யானையின் வயது சுமார் 25 முதல் 30 வரை இருக்கலாம் எனவும் யானை இறந்து இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் உடல் உபாதைகளால் யானை இயற்கையான முறையில் இறந்திருக்கலாம் எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags
Next Story