அடிப்படை வசதியின்றி தவிக்கும் மருத்துவமனை - அரசியல் கட்சிகள் கோரிக்கை
மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் முகாமில் குத்தாலம் தாலுகாவை சேர்ந்த மதிமுக விசிக, பாஜக, அதிமுக, கட்டிட தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து கட்சியினர் பாமக மாவட்ட செயலாளர் விமல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு ஒன்றை அளித்தனர், அதில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவாகி 15 வருடங்கள் ஆகிறது. குத்தாலத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக பயன் பெற்று வருகின்றார்கள்.
மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அன்றாடம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இம் மருத்துவமனையில் பலலட்சம் மதிப்புள்ள ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் உள்ளன. ஆனால் ஓர் ஆண்டாக அதனை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. இதனால் பிரசவங்களுக்கு, மக்கள் பிற மருத்துவ மனைக்கு செல்ல வேண்டி உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அவதியுற்று மயிலாடுதுறை செல்லும் சூழல் உள்ளது.
மக்களுக்கு இதனால் பொருளாதார விரயம் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை விட புற நோயாளிகள் எண்ணிக்கை குத்தாலத்தில் அதிகமாக புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மருத்துவ மனையில் உதவியாளர்கள் காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் உள்ளனர் உடனடியாக பணியிடங்களை நியமனம் செய்ய வேண்டியும் அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கள் நலன் காக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.