தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் கோரிக்கை

தென்னை விவசாயிகள்

தேர்தல் நேரத்தில் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கொடுப்போம் என சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என தென்னை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கொடுப்போம் என சொன்னதை நிறைவேற்ற வேண்டும். தென்னை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை. தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் தரமான தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை விநியோகம் செய்தால், பொதுமக்களுக்கு உடல் நலத் தீங்கு ஏதும் ஏற்படாது. அதே சமயம் தென்னை விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும். இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தென்னை உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனை நடைமுறைப்படுத்தாததால் என்று கரூர் உழவர் சந்தை அருகே தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேங்காயை கையில் ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தை நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணி, தமிழகத்தில் 138- லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு விவசாய நிலமாக உள்ளது. இதில் 62 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் 40 சதவீதம் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு தேங்காய் விலை 15 ரூபாயாக இருந்தது.

இன்று 6 முதல் 7 ரூபாயாக உள்ளது. அன்று ஒரு மரம் ஏறுவதற்கு கூலி ரூ. 15 ஆக இருந்தது. இன்று ரூ.30 முதல் 35 ஆக உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியில் 61வது வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் மற்றும் வேளாண் பொருட்களுக்கு உரிய விலைக் கொடுப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் இன்று வரை வழங்கவில்லை.

மேலும், கரூர் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் கெட்டுவிட்டது. இதனால், தேங்காய் களும் சிறுத்து விட்டது. எனவே, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக அரசு கருதி, உடனடியாக எங்களது கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story