மயிலாடுதுறையில் மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற் பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சங்க பொறுப்பாளர் இளவரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல,
பணியாளர்களின் பண பயன்கள், ஓய்வூதிய பலன்களை பிரிக்கப்பட்ட கம்பெனி அமலாக்க மறுத்தால் மாநில அரசு பொறுப்பு ஏற்கும் என்ற உத்தரவாதம் உள்ளது , ஆனால் தமிழக அரசு அதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவில்லை அந்த நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்று மட்டுமே கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் இதனால் 80 ஆயிரம் பணியாளர்களும் 96 ஆயிரம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி பெறுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும்
இதுபோன்ற ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கலைச்செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.