கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

கூட்டுறவுத்துறை ஊழியர்களை தொலைதூர மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்வதைக் கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளர் பணியிடத்தில் இருந்து முதுநிலை ஆய்வாளர் பதவியர்வு 33 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடங்கள் இருந்தும் தொலைதூர மாவட்டங்களுக்கு மண்டல ஒதுக்கீடு செய்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் இந்த பதவி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 மூலம் அடுத்த சில மாதங்களில் பலர் பணியில் சேரவுள்ள நிலையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களை தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கைவிட்டு சொந்த மாவட்டம் அல்லது காலிப்பணியிடம் இல்லாவிடில் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியமர்த்தம் செய்ய கோரி அனைத்து மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில்மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவும் மாநில மையம் முடிவு செய்தது.

அவ்வகையில், மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சிவபழனி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story