உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
இபிஎஸ் 95 - அகில இந்திய ஓய்வூதிய நல சங்கத்தினர் ,மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக,மாவட்ட தலைவர் அம்பிகாபதி தலைமையில மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இபிஎஸ் -95 திட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட பென்ஷன் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத, மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக தீர்ப்பை நிறைவேற்ற கோரி ,கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இபிஎஸ் 95 பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ .மருத்துவ காப்பீடு வசதியும் மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தற்போது வழங்கும் ரூ.1000, இபிஎஸ் 95 ஓய்வூதியதாரர்களின் துணைவியார்களுக்கும் வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அகில இந்திய ஓய்வூதிய நலச் சங்கத் துணைத் தலைவர் மணிமாறன் விளக்க உரையாற்றினார்.
