நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கடைபிடிக்க கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? என கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார்(தெற்கு), இனியவன்(வடக்கு) மாவட்ட தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பொதுத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையை கைவிட்டு வாக்கு சீட்டு முறையைகொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story