திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி  ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரியும் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த கோரி மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 நபர்களை முன்னாள் முதல்வர் கலைஞர் நியமனம் செய்தார். 1991 இல் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர்களை பணிநீக்கம் செய்தார். மீண்டும் 1997ல் பதவிக்கு வந்த கலைஞர் பணி நியமனம் செய்தார். மூன்று முறை முன்னாள் முதல் ஜெயலலிதாவால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். மக்கள் நல பணியாளர்கள் நான்காவது முறையாக தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் என நியமனம் செய்யப்பட்டு ரூ.7,500 மட்டுமே ஊதியம்பெற்று வருகின்றனர். 33ஆண்டுகளில்12ஆண்டுகள் மட்டுமேபணிசெய்துள்ளனர். 25,000 மக்கள் பணியாளர்களில் தற்போது 13,500 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை, பணி நிரந்தரம் ஆக்கப்படவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags

Next Story