அரசாணை 243ஐ ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90%ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணை எண் 243-ஐ உடனடியாக திரும்பபெற கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90%ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணை எண். 243-ஐ உடனடியாக திரும்பபெற வேண்டும். 2023 அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான ஆணையினை உடனடியாக வெளியடவேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிட உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
