காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக ஆர்பாட்டம்

காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக ஆர்பாட்டம்

ஆர்பாட்டம்

இரண்டு தரப்பினர் புகார் மீது வழக்கு பதிவு செய்த மணல்மேடு போலீசார் ஒரு தரப்பிற்கு சாதகமாக இருப்பதை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இரண்டு தரப்பாறும் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அடிதடி கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஞானசேகரன் தரப்பினர் மட்டும் நிபந்தனை ஜாமீன் எடுத்துக்கொண்டு தினந்தோறும் மணல்மேடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றனர்.

ஆனால் , கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்தரப்பினரை மணல்மேடு போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து பல முறை கேட்டுக்கொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்ட உதவி சங்கத்தின் நிறுவனர் ஏபி ராஜா தலைமையில் இன்று மணல்மேடு காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் . இன்னும் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்க கூறினார் . அதன்பேரில் மணல் மேடு காவல் நிலைய முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது . இதில் மயிலாடுதுறை நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story