கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

ஏப்ரல் 9-ம் தேதி அமராவதி ஆற்றில் இருந்து அக்னி சட்டி, அலகு எடுத்து வந்து அன்றைய தினம் கோவில் அருகே அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகுமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11-ம் தேதி மாவிளக்கு பூஜைகள் நடைபெற்று, பின்னர் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அப்போதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாறியை தலையில் சுமந்தமாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கம்பம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சியை தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும் அமராவதி ஆற்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story