மயிலாடுதுறையில் ராதா கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் ஆடிப்பாடி வழிபாடு

மயிலாடுதுறையில் ராதா கல்யாண உற்சவம் பாகவத பஜனைகளுக்கு கோலாட்டத்துடன் ஆடிப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று ஆடி பாடி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாயவரம் ராதா கல்யாண ட்ரஸ்ட் சார்பில் 69 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது 3நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பிரபல பாகவதர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான்று கீதகோவிந்தம் அஷ்டபதி பஜனை நாம சங்கீர்த்தனம் திவ்ய நாம பஜனை சங்கீத உபன்யாசம் நடைபெற்றது. பாகவத பஜனைகளுக்கு கோலாட்டத்துடன் ஆடிப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து திரளான பக்தர்கள் பங்கேற்று ஆடி பாடி வழிபாடு செய்தனர்.
Next Story
