தருமபுர ஆதீனத்தின் உதவியாளர் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட திருவையாறு செந்தில்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ண்மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் விமானம் மூலம் வாரணாசிக்கு சென்று, அங்கு மொட்டை அடித்து, தாடி வைத்து மாறு வேடத்தில் பதுங்கி இருந்த செந்திலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருவையாறு செந்தில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படு சிறையில் அடைக்கப்பட்டார்.