தருமபுர ஆதீனம் வழக்கு - முக்கிய குற்றவாளி திருச்சி சிறைக்கு மாற்றம்

தருமபுர ஆதீனம் வழக்கு -  முக்கிய குற்றவாளி திருச்சி சிறைக்கு மாற்றம்

அகோரம் 

மயிலாடுதுறை தருமபுர ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கின் முக்கிய குற்றவாளியான மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27- சந்நிதானம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் பிப்.20-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில், முதற்கட்டமாக பிப்ரவரி 28ஆம் தேதி செம்பனார்கோவில் குடியரசு, பாஜக பொறுப்பாளர்கள் ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மகாராஸ்டிரா மாநிலத்தில் பதுங்கியிருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை கைது செய்து மார்ச் 16-ஆம் தேதி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மயிலாடுதுறை கிளை சிறயிலிருந்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்குமார் தயாள் பிறப்பித்த உத்தரவின் பேரில் மயிலாடுதுறை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு, பாஜக பிரமுகர்கள் வினோத், விக்னேஷ் ஆகியோர் மயிலாடுதுறை கிளைச்சிறையில் உள்ள நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மட்டும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி சிலைக்காக வெளியில் அழைத்து வரப்பட்ட அகோரம் நான் ஒரிஜினல் ஆம்பிளை. நீங்கள் ஒரிஜினல் ஆம்பளையாக இருந்தால் என் மீது ஒரு குற்றத்தையாவது நிரூபியுங்கள் என்றார்‌

Tags

Next Story