தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மயிலாடுதுறை காவிரிக்கரையில் தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயம் உள்ளது. அதில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 132 வது ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திருமஞ்சனவீதி காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் மற்றும் சிவப்பு, மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர்.
கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 500 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நடந்து வந்தும், பால் குடம் எடுத்தும் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் .
