தாமரைப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

பல்வேறு முறைகேடு புகார்களுக்கு உள்ளான தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் மீது ஊராட்சி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்த நிலையில். இவரது கணவர் துளசிராமன் ஊராட்சி மன்ற பணிகளில் தலையிட்டு பல்வேறு இடையூறுகள் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வந்த நிலையில். விதிகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்கியது அரசு தலைப்புகளுக்கு வரவினமாக வரவேண்டிய தொகை நிதி இழப்பு ஏற்படுத்தியதும். முறையாக ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தாமல் முறையற்ற ஊராட்சி தீர்மானம் இயற்றியதும். ஊராட்சி கணக்கிற்கு வர வினமாக்க வேண்டிய தொகையினை கால தாமதமாக செலுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதாலும். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் அரசு மற்றும் ஊராட்சிக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்படுவதுடன் தனது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story