தண்ணீர் பிடிப்பதில் தகராறு - பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

தண்ணீர் பிடிப்பதில் தகராறு - பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

 கார்த்திக்

கரூரில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் கடுங்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பத்மாவதி. அதே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கார்த்திக். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி, தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கார்த்திக், இளங்கோவன் மற்றும் பத்மாவதி ஆகியோரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் தாக்கியதில் பத்மாவதி உயிரிழந்தார். இது தொடர்பாக கார்த்திக் மீது கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதி, கார்த்திக் குற்றவாளி தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 100 அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர், சாட்சிகளை முறையாக ஆஜர் செய்த கரூர் நகர காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஆகியோரை திருச்சி மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல் துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பணிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story