மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுjத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு அரிசி வழங்கல். டிசம்பர் 3- உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கொடையாளர்களுடன் இணைந்து அருள்மிகு மாரியம்மன் எஜிகேசன் டிரஸ்ட், பூச்சொரிதல் விழா கமிட்டி, TC நற்பணி மன்றம் இணைந்து 130 மாற்றுதிறனாளிகளுக்கு 500-கிலோ அரிசி 130- பிஸ்கட்பாக்கெட்கள் வழங்கும் விழா கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவை கருர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலைபழனியப்பன் துவக்கி வைத்தார். உடன் சாந்தி மெஸ் பூமிநாதன், கொடையாளர் ஸ்ரீகாந்த், பரமேஸ்வரன், பூத்தட்டு கமிட்டி துணை தலைவர் L.G.B நகர் ராகவன் மேட்டு தெரு பூத்தட்டு குழு நிர்வாகிகள், ஸ்ரீமாரியம்மன் எஜிகேசன்டிரஸ்ட் துணை தலைவர்கள் இராயனூர் முருகேசன், T.C.M கோகுல், பொருளாளர் ரவிசந்திரன், ஆலோசகர் கோபால் , கிரி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கரூர் மாநகர பகுதியைச் சேர்ந்த 130 மாற்றுத்திறனாளிகளுக்கு தல 4 கிலோ வீதம் மொத்தம் 500 கிலோ அரிசியும், 130 பிஸ்கட் பாக்கெட்டுகளும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். செயலாளர் பெரிய சாமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ மாரியம்மன் எஜுகேசன்டிரஸ்ட் தலைவர் TC மதன் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story