தேசிய போதை மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய போதை மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய போதை மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள கிராமிய சமூக நல சங்கத்தின் சுவாமிநாதன் நினைவு தேசிய போதை மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சுவாமிநாதன் நினைவு தேசிய போதை மறுவாழ்வு மையமானது செயல்பட்டு வருகிறது. இம்மையமானது, 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இம்மையத்தில், பல்வேறு கட்டங்களில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இலவசமாக மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில், ஒரு ஆண்டிற்கு 180 நபர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இம்மையத்தில் 15 நபர்களுக்கு போதை மறுவாழ்விற்கு தேவையான பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, கிராமிய சமூக நல சங்க தன்னார்வல தொண்டு நிறுவன செயலர் ராஜமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story