எழுத்துத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு.


அரசு கலைக் கல்லூரியில், எழுத்துத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு.

அரசு கலைக் கல்லூரியில், எழுத்துத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில்,மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் எழுத்துத் தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக, கூட்டுறவு சங்கங்களின் 37 உதவியாளர் காலிப் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. இக்காலி பணியிடங்களுக்கு மொத்தம் 584 தேர்வர்கள் இன்று எழுத்துத் தேர்வுக்கு தகுதி உடைய நபர்களாக தேர்வு செய்யப்பட்டனர் . இதில் 489 தேர்வர்கள் எழுத்து தேர்வினை எழுதினர். தேர்வு மையத்திற்கு 95பேர் தேர்வு எழுத வராதவர்கள் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வின் நிறைவில் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அபிராமி, துணைப்பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிச்சைவேலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story



